Wednesday, July 6, 2022

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் முதியவரின் சடலமொன்று இன்றையதினம் மீட்பு!

 யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பது இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சடலத்தை பார்வையிட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், முதியவர் தீவகப்பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Monday, August 21, 2017

விஜயதாஸ ராஜபக்ஷ மீது இன்று சட்டநடவடிக்கை?

புத்த சாசன மற்றும் நீதியமைச்சராக பதவி வகிக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் இரண்டு அமைச்சுப் பதவிகளும் இன்றைக்குள் அவரிடமிருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்சித் தலைமையை விமர்சித்தும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் வகையிலும் அண்மைக்காலமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கருத்து வெளியிடத் தொடங்கியிருந்தார்.
அத்துடன் முன்னாள் அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகள் குறித்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளிலும் விஜயதாச ராஜபக்ஷவுக்குத் தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
மேற்குறித்த காரணங்களுக்காக அவர் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.
எனினும் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் அது தொடர்பில் கட்சிரீதியாக மன்னிப்புக் கோருவதற்குமான அவகாசமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு வழங்கியிருந்தார். அவ்வாறு தன்னைத் திருத்திக் கொள்ள விஜயதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்குமிடத்து அவருக்கு பௌத்த சாசன அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவதற்கான இடமளிக்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.
குறித்த காலஅவகாசம் திங்கட்கிழமை மாலையுடன் நிறைவுபெற்றுள்ளது. எனினும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தன்னைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக தொடர்ந்தும் அரசாங்கத்தையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையையும் விமர்சித்துக் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக அவரை அமைச்சுப் பதவியில் இருந்து முற்றாக நீக்குமாறு கோரும் கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திங்கள் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கையளித்துள்ளார். இதன்போது அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம் உள்ளிட்டோரும் விஜயதாசவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய் மாலைக்குள்ளாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் இருக்கும் இரண்டு அமைச்சுப் பதவிகளும் நீக்கப்படும் என்று நம்பகமாகத் தெரியவந்துள்ளது.

தடம் மாறுகிறாரா அ னந்தி?

காணாமல்ப்போனோர் விடயங்கள் தொடர்பாக கதைத்து வந்தமையினாலும் அனுதாப வாக்குகளினாலும் வருகை தந்த அனந்தி சசிதரன் தனது சுயநலத்திற்காக மாகாணசபையை பயன் படுத்துகிறார் என எண்ணத்தோன்றுகிறது. காரணம் தற்போது பதவிகளுக்காக அடிபடுவதை காணக்கூடியதாகவே உள்ளது

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன, பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராவார் என அறிவிக்கப்பட்டது, நிதித்துறை இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இந்நிலையில் ராஜ் பவனில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது.